மதுரைப்படுகொலை

"பானல் வாயொரு பாலன் ஈங்கிவன்....
ஈனர்களுக்கு எளியேன் அலேன்!"

புது வருடத்தில் பானை பொங்கும்போது பாடப்பட்ட தேவாரத்தில் இந்த வரி கவனத்தை ஈர்த்தது. பதினோரு வருடங்கள் "அன்பே சிவம்" என சைவ சமயத்தைப் போதிக்கிறார்கள். சமணர்கள் சைவர்களுக்கு செய்த கொடுமைகளை மனப்பாடம் செய்து எழுத வைக்கிறார்கள். ஆனால், பதிலுக்கு சைவர்கள் சமணருக்கு செய்த கொடுமைகளைப்  பற்றி வாயே திறப்பதில்லை.

மதுரைப் படுகொலை (Madhurai Massacre) என தேடிப்பாருங்கள். பன்னிரு வயது நிரம்பிய பானல் வாயொரு பாலனாகிய திருஞானசம்பந்தரே முன்னின்று தன்னுடன் வாதத்தில் தோற்ற எண்ணாயிரம்  சமணரை கழுவில் ஏற்றி படுகொலை செய்திருக்கிறார். இப் பாதகச் செயலை சேக்கிழார் பெரியபுராணத்தில் பெருமையோடு விபரிக்கின்றார் (see comment). இதனை சித்திரமாக வேறு வரைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்திருக்கிறார்கள். இவ்வாறாக சமண சமயத்தை பூண்டோடு அழித்த  பெருமை இந்து மதத்தையே சாரும்.

இந்த நல்ல நாளில் இந்த வியாக்கியானம் தேவையா என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான் : "வரலாறு முக்கியம் அமைச்சரே!"

First posted on Facebook: facebook.com/abarajithan11/posts/10216350571988396