உலகின் முதல் Developer

Thoughts Apr 2, 2018
"எப்போதும் அசுரர்களே மிகப் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் தவம் புரியும்போது புத்திசாலித்தனமான வரங்களைக் கேட்டுப் பெறுகிறார்கள்.

இரண்யன் எனும் அசுரன் தவம் புரிந்து கேட்ட வரம்: 'எனக்கு மனிதனாலும் மிருகத்தாலும் மரணம் வரக் கூடாது. ஆயுதங்களால் மரணம் வரக் கூடாது. வீட்டின் உள்ளேயும், வெளியேயும் மரணம் வரக் கூடாது...' "

இதுக்குப் பெயர்தான் EXCEPTION HANDLING!!
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலே தோன்றிய மூத்த developer நம் முப்பாட்டன் என்பது நமக்குப் பெருமையல்லவா???

"அந்த இரண்யனை வதம் செய்ய முடிவெடுத்த விஷ்ணு, மனிதனோ மிருகமோ அல்லாத நரசிம்ம அவதாரம் எடுத்தார். உள்ளேயும் வெளியேயும் இன்றி, வீட்டின் வாசலில் வைத்து, ஆயுதம் இன்றி, நகங்களாலேயே அவன் வயிற்றைக் கிழித்தார்."

இரண்யன் handle செய்த அத்தனை test cases இலும் சிக்காமல் ஒரு input ஐ கொடுத்து அவனது (digestive) சிஸ்டத்தை க்ராஷ் செய்த உலகில் முதல் hacker உம் ஒரு இந்துக்கடவுள் என்பதைச் சொல்லிக்கொண்டு... :-P

First posted on Facebook: https://web.facebook.com/abarajithan11/posts/10213830133819017

Tags